பள்ளிக் கல்வித்துறை வளாகம் 
தமிழ் நாடு

திருத்தப்பட்ட பள்ளி நாள்காட்டி வெளியீடு… 10 நாள்கள் வேலை குறைப்பு!

Staff Writer

தமிழ்நாடு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 220ஆக இருந்த பள்ளி வேலைநாள்கள் 210ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதையடுத்து நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

அதில் பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதையடுத்து வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலை நாட்களை குறைத்து, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram