ராமதாஸ் 
தமிழ் நாடு

21 வயது வந்தால் திருமணம்- ராமதாஸ்; பா.ம.க. தேர்தல் அறிக்கை!

Staff Writer

பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.

அதில், “இந்து திருமணச் சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளைக் களையவும், பாலினப் பாகுபாட்டை அகற்றவும், குழந்தைகள் உரிமைகளைக் காக்கவும் பா.ம.க. பாடுபடும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய பா.ம.க. நிறுவனர் இராமதாசு, 21 வயதுக்குக் குறைவானவர்கள் திருமணம் செய்துகொண்டால் பெற்றோர் ஒப்புதல் வேண்டும் என சட்டம் கொண்டுவருவோம் என்றார். 

இதை தாங்கள் மட்டும் சொல்லவில்லை என்றும் கர்நாடக மாநில நீதிமன்றமே கூறியுள்ளது என்றும் திருமண வயதையே 21ஆக ஆக்கிவிடலாம் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறினார்.