எழுத்தாளர் ஜோ டி குரூஸ், விஜயகாந்த் 
தமிழ் நாடு

விஜயகாந்த், ஜோ டி குரூஸ் உட்பட 7 தமிழர்களுக்கு பத்ம விருது அறிவிப்பு!

Staff Writer

விஜயகாந்த், எழுத்தாளர் ஜோ டி குரூஸ் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு நடப்பு ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம், சினிமா, கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்து துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான/ சாதனைகள் / சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவிப்பார்.

அதன்படி இந்த அண்டு பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும், பத்ம பூஷன் 17 பேருக்கும், பத்ம விபூஷன் 5 பேருக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்ம விபூஷன்

1) வைஜெயந்திமாலா – கலை

2) சிரஞ்சீவி – கலை

3) வெங்கையா நாயுடு - பொது விவகாரம்

4) பிந்தேஷ்வர் பதக் – சமூக சேவை

5) பத்மா சுப்ரமணியம் – கலை

பத்ம பூஷன்

1) பாத்திமா பீவி – பொது விவகாரம்

2) ஹோர்முஸ்ஜி என் காமா – இலக்கியம் & கல்வி, இதழியல்

3) சீதாராம் ஜிண்டால் – வணிகம் & தொழில்

4) விஜய்காந்த் – கலை

இவர்கள் உட்பட 17 பேருக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ

1) பத்ரப்பன் - வள்ளிக்கும்மியாட்ட நடன ஆசிரியர்.

2) பார்பதி பரூவா- இந்தியாவின் முதல் பெண் யானை பாகன்

3) ஜெகேஷ்வர் யாதவ்- பழங்குடியின நல சமூக சேவகர்.

4) சாமி முர்மு - சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு

5) குர்மீந்தர் சிங் - சமூக சேவை.

6) சத்யநாராயணனா பெலேரி -பாரம்பரிய நெல் விவசாயம்

7) சங்கதன் ஹிமா - சமூக சேவை.

8) ஹேம்சந்த் மஞ்சி - பாரம்பரிய மருத்துவம்

9) துஹ்குமஞ்சி -மேற்குவங்க பழங்குடியின மேம்பாடு

10) கே. செல்லம்மாள்- தெற்கு அந்தமான்: ஆர்கானிக் விவசாயம்.

11) யனுங்க் ஜமோலிகோ - மூலிகை மருத்துவம்.

12) சோமன்னா - பழங்குடியினர் நல சமூக சேவை.

13) சர்பேஷ்வர் பசுமத்ரி - மலைவாழ் விவசாயம்.

14) பிரேமா தன்ராஜ் - சமூக சேவை, பிளாஸ்டிக் மறுசுழற்ச்சி

15) உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே -சர்வதேச விளையாட்டு மல்லர் ஹம்.

16) யாஸ்தி மேனக்சா இட்டாலியா - நுண்ணுயிறியியல்

17) ஷாந்தி தேவி பஸ்வான் - சமூக சேவகி

18) ரத்தன் கஹர் - நாட்டுப்புறப் பாடகர்

19) அசோக்குமார் பிஸ்வாஸ் - பெயிண்டர்

20) பாலகிருஷ்ணன் சதானம் - புதிய வீட்டில் கல்லுவாளி கதக்ளி கலைஞர்

21) உமா மகேஷ்வரி - முதல் பெண் ஹரிகதா விரிவுரையாளர்

22) கோபிநாத் ஸ்வைன் - பாடகர் கிருஷ்ணலீலா

23) ஸ்மிருதி ரேகா சத்மா - திரிபுரா நெசவாளர்

24) ஓம்பிரகாஷ் சர்மா - பாரம்பரிய நடனக் கலைஞர் (மால்வா பிராந்தியம்)

25) நாராயணன் - கண்ணுர் - நாட்டுப்புற நடன கலைஞர்

26) பகபத் பதன்- நிருத்தியா நடனக் கலைஞர்

27) சனாதன் ருத்ரபால் - பாரம்பரிய சிற்பி

28) ஜோடான் லெப்சா - மூங்கில் கைவினைஞர்

29) மச்சிஹான் சாசா - மண்பாண்டக் கலைஞர்

30) காடம் சம்மையா - சிந்து நாடக கலைஞர்

31) ஜான்கிலால்: பில்வாரா -பெஹூரூபியா கலைஞர்

32) தாசரி கொண்டப்பா - வீணை கலைஞர்

33) பாபுராம்யாதவ் - பித்தளைப் பொருள் கைவினைக் கலைஞர்

34) நோபள் சந்திர சுத்ராதர் - மூன்றாம் தலைமுறை முகமூடிக் கலைஞர்

35 ) ஜோஷ்னா சின்னப்பா - விளையாட்டு

36) எழுத்தாளர் ஜோ டி குரூஸ் – இலக்கியம்

37) நாச்சியார், சேஷம்பட்டி சிவலிங்கம் - கலை

இவர்கள் உட்பட 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.