மழை 
தமிழ் நாடு

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்... எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Staff Writer

தமிழகத்திற்கு இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

மழையின் போது, மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.