மழை (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

வடகிழக்குப் பருவமழை நவ. 12ஆம் தேதி முதல் சூடுபிடிக்கும் - பிரதீப் ஜான்!

Staff Writer

வரும் நவம்பர் 12 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை. வரும் நவ. 12 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆரம்பிக்கும் இந்த முதல்கட்ட மழை, தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தீவிரமடையும்.

வரும் நவம்பர் 12 முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும், இந்த புயல் சின்னம் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, நவம்பர் 12 ஆம் தேதி சென்னை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram