திருநெல்வேலியில் உள்ள ஜல் எனும் நீட் பயிற்சி மையத்தை கேரளத்தைச் சேர்ந்த ஜலாலுதீன் அகமது நடத்திவருகிறார். இங்கு இரு மாநில மாணவர்களும் பயிற்சி பெற்றுவருகின்றனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கும் இப்பயிற்சியில் இரு பாலரும் தங்கிப் படித்துவருகின்றனர்.
மாணவிகளுக்குத் தனி விடுதி வசதி உள்ளது.
இந்நிலையில், சில நாள்களுக்குள் அங்கு இடைவேளை நேரத்தின்போது மாணவர்கள் சிலர் தூங்கிவழிந்துள்ளனர்; அதை கண்காணிப்பு கேமராவில் பார்த்த ஜலாலுதீன் அந்தக் குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து, அனைவரின் முன்பாகவும் பிரம்பால் கடுமையாக அடித்துள்ளார்.
அத்துடன், மாணவி ஒருவர் தன் காலணியை இடம்மாறி வைத்திருந்ததற்காக அந்தக் காலணிகளை எடுத்து வகுப்பில் மாணவிகள் பக்கம் வீசியும் ஜலாலுதீன் அட்டூழியம் செய்துள்ளார்.
இந்தக் கட்சிகள் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவின. ஊடகங்களிலும் வெளியாகின. இதைத் தொடர்ந்து மாநில மனிதவுரிமை ஆணையம் இதை சுயவழக்காகப் பதிவுசெய்து நேரடியாக விசாரணையில் ஈடுபட்டுள்ளது.