முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரபூர்வ பயணமாக இன்று மாலை சென்னையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார். முன்னதாக, அவரை சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி சந்திக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் திட்டமிட்ட தில்லிப் பயணத்தால் அந்த நேரத்திற்குள் புழல் சிறையிலிருந்து செந்தில்பாலாஜி வெளியே வரவில்லை.
முதலமைச்சர் புறப்பட்ட நிலையில் பாலாஜியால் அவரை முதலில் சந்திக்கும் நிகழ்வு நடைபெறவில்லை.
இந்நிலையில், விமானம் மூலம் தில்லியை அடைந்த முதலமைச்சருக்கு தி.மு.க.வினரும் தமிழக அரசின் உயரதிகாரிகளும் வரவேற்பு அளித்தனர்.
நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மூத்த நாடாளுமன்றவாதி திருச்சி சிவா, தயாநிதி, கனிமொழி, தமிழக அரசின் தில்லிப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உட்பட பலரும் விமானநிலையத்தில் ஸ்டாலினுக்கு மலர்க்கொத்தும் பொன்னடை அளித்தும் வரவேற்றனர்.
பிரதமர் மோடியைச் சந்தித்து தமிழகத்துக்கான கோரிக்கைகளை முதலமைச்சர் வலியுறுத்துகிறார்.