மனோ தங்கராஜ் 
தமிழ் நாடு

அமைச்சர் பதவி பறிப்புக்குப் பின் கொட்டித் தீர்த்த மனோ தங்கராஜ்… வைரலாகும் பரபரப்பு பதிவு!

Staff Writer

பால்வளத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு தான் அமைச்சராக இருந்தபோது செய்த செய்த பணிகளை மனோ தங்கராஜ் பட்டியலிட்டு ட்வீட் செய்திருப்பது வைரலாகி உள்ளது.

தமிழக அமைச்சரவை நேற்று இரவு மாற்றப்பட்டுள்ளது. இதில் மனோ தங்கராஜ் உள்பட 4 பேர் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.

2023இல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024இல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது.

விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி! மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram