மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

டென்ஷன் ஆன உதயநிதி... தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகள்... என்ன காரணம்?

Staff Writer

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மதுரை, கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள், அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளின் பணி ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

அப்போது சில அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிய பணியில் மெத்தனமாக நடந்து கொண்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மதுரை தெற்கு வட்டாட்சியர் சரவணன், திருப்பரங்குன்றம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர், செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி கீதா ஆகியோர் உடனடியாக பணி இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதுதவிர சுகாதார ஆய்வாளர், ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு சமயலர் ஆகியோரும் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த கே.காா்த்திகா கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஆா். முருகன் சென்னை பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநராக (மின் ஆளுமை) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாறுதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான உத்தரவைப் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சோ.மதுமதி பிறப்பித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram