தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பிக்க இறுதி நாள் 20.05.2024 ஆக இருந்தது 24.05.2024 ஆக நீட்டிக்கப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
”தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 24/05/2024 ஆகும்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டண விவரம்
விண்ணப்பக் கட்டணம் : ஒரு மாணவருக்கு : ரூ.48/-
பதிவுக் கட்டணம் : ரூ.2/-
SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.
பதிவுக் கட்டணம் : ரூ.2/-
கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணம், பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
தொடர்பு எண்: 044 – 24343106 / 24342911.”