பிக் பாஸ் கமல் 
தமிழ் நாடு

பிக் பாஸ் விலகல் ஏன்?- கமல் விளக்கம்!

Staff Writer

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:  

”அன்பான பார்வையாளர்களே,

ஏழு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நம்முடைய பயணத்திலிருந்து ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொள்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். முன்னர் ஒப்புக்கொண்ட திரைப்படங்களுக்காக, வரவிருக்கும் ’பிக் பாஸ்’ சீசனை என்னால் தொகுத்து வழங்க இயலாது.

உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கக்கூடிய ஒரு அரும்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்திருக்கிறீர்கள். இதற்காக நான் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன். இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஆவதற்கு போட்டியாளர்களுக்கு நீங்கள் அளித்த உற்சாகமான, உணர்வுபூர்வமான ஆதரவே காரணம்.

தனிப்பட்டு, இந்நிகழ்வை வழங்கியவன் என்கிற முறையில் நேர்மையான முறையில் நான் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய இடமாக அமைந்தது. இந்த கற்றல் அனுபவத்திற்காக எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடனும் பார்வையாளர்களான உங்களுடனும் நமக்கான நேரத்தைச் செலவழித்ததற்கு நன்றி.

நிறைவாக, விஜய் டிவியின் அற்புதமான நிகழ்ச்சிக் குழுவினருக்கும், இந்த நிறுவனத்தை பெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி.

வரக்கூடிய பிக் பாஸ் சீசன், இன்னொரு வெற்றியாக அமையும் என்று நம்புகிறேன்.

உங்கள் நான்

கமல் ஹாசன்.”

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram