கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஜய் 
தமிழ் நாடு

கள்ளக்குறிச்சியில் எடப்பாடி, உதயநிதி, விஜய்... ’முதல்வர் எங்கே?’

Staff Writer

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடும் பாதிப்படைந்த 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி  கருணாபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பிற்பகலில் அந்த ஊருக்கே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

அதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாபுரம் கிராம மக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரசின் நிவாரணம் தலா 10 இலட்சம் ரூபாயையும் அவர் வழங்கினார். 

பின்னர், புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யும் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று வார்டுகளுக்குள் நோயாளிகளைச் சந்தித்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.  

இதனிடையே, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையும் கருணாபுரத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் நேரடியாக வது பார்வையிடவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.