கச்சத்தீவு விவகாரத்தை நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் விவாதப் பொருளாக மாற்றியுள்ளது.
கச்சத்தீவுதொடர்பாகதகவல் உரிமைச் சட்டத்தில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை கேட்டதற்கு அரசு அளித்த பதிலில், இந்திராகாந்தி காலத்தில் கருணாநிதியின்ஆட்சியில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதையடுத்து, பிரதமர் மோடியும் காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது என்றும் 75ஆண்டுகளாக அக்கட்சி நாட்டு நலன்களை விட்டுக்கொடுத்துவந்துள்ளதாகவும்தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஊடகத்தினரிடம் பேசிய காங்கிரஸ் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை, பத்து ஆண்டுகளாக பா.ஜ.க.தானே ஆட்சியில் இருக்கிறது... கச்சத்தீவை மோடி அரசு மீட்டிருக்கலாமே... ஏன் மீட்கவில்லை என்று கேட்டுள்ளார்.
நாளையும் இதுகுறித்த தகவலை வெளியிடப்போவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.