ஜெயரஞ்சன், திட்டக்குழு துணைத்தலைவர் 
தமிழ் நாடு

டாஸ்மாக் காச வச்சிதான் பட்ஜெட்டா?- மாணவிக்கு திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பதில்!

Staff Writer

அரசு மதுக்கடைகளை நம்பித்தான் அரசு நிதிநிலை இருக்கிறதா என கல்லூரி மாணவி கேட்ட கேள்விக்கு, திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பதில் அளித்துள்ளார்.

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னை இலக்கியத் திருவிழா, இளைஞர் இலக்கிய விழா நடைபெற்றது. 

அதில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் எனும் தலைப்பில் திட்டக்குழுத் துணைத் தலைவர் - பொருளாதார அறிஞருமான ஜெயரஞ்சன் பேசினார். 

பின்னர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. அப்போது மாணவி ஒருவர், அரசு மதுக்கடைகள் மூலம் அரசின் பொருளாதாரம் இருக்கிறதே எனக் கேட்டார். 

அதற்கு ஜெயரஞ்சன், இப்படியென யார் சொன்னது என எதிர்க்கேள்வி கேட்டார். 

அப்படித்தானே நடக்கிறது சார் என்று அந்த மாணவி விடாமல் கேட்டார். 

” யார்தான் இப்படி உங்களுக்குச் சொன்னது?  நம்முடைய பட்ஜெட் எவ்வளவெனத் தெரியுமா... கல்லூரி மாணவராக இருக்கிறீர்கள்... கைபேசியில் அடித்துப் பார்த்தால் எல்லா விவரங்களும் வந்துவிடப் போகின்றன. இப்படி தெரியாமல் பேசலாமா?” என்று மடக்கிக் கேட்டார். 

”நம்முடைய அரசின் வருமானம் 3 இலட்சம் கோடி ரூபாய்; டாஸ்மாக்கின் மூலம் 15 ஆயிரம் கோடி ரூபாய்தான் வருகிறது; 3 இலட்சம் எங்கே...15 ஆயிரம் எங்கே... இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது!” என்று பதில்கூறினார், ஜெயரஞ்சன்.