முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 
தமிழ் நாடு

"இந்த அரசை அப்பாவும் புள்ளையும்தான் மாறிமாறி பாராட்டிக் கொள்கிறார்கள்" – ஜெயக்குமார் விமர்சனம்

Staff Writer

“இந்த அரசை அப்பாவும் புள்ளையும்தான் மாறி மாறி பாராட்டிக் கொள்கிறார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: “சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் சூழலில், தொண்டர்களின் விரும்பத்திற்கு ஏற்ப கூட்டணி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார். வெற்றிக் கூட்டணி அமைப்பார்.

அதிமுகவை விஜய் விமர்சிக்காததற்கு காரணம், எங்களின் 31 மாத கால சிறப்பான ஆட்சிதான். மக்கள் போற்றுகின்ற ஆட்சி எங்களுடையது. 2026இல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என மக்கள் ஆசைப்படுகிறார்கள்.

ஆட்சி சரியில்லை, கட்சி சரியில்லை என்றால்தான் விமர்சனம் வரும். கட்சியை நாங்கள் சிறப்பாக வழிநடத்தும்போது எப்படி எங்கள் மீது விமர்சனம் வரும்.

மக்கள் விரோத போக்கை திமுக கடைப்பிடிக்கிறது. தென்மாவட்டத்தில் தலித் சிறுவர் மீது தாக்குதல் நடந்து இருக்கிறது. இந்த ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த அரசை யார் பாராட்டுகிறார்கள்? அப்பா பிள்ளையைப் பாராட்டுகிறார். இல்லையெனில் பிள்ளை அப்பாவை பாராட்டுகிறார். இந்திய அரசோ, வெளிநாடுகளோ இந்த அரசை பாராட்டவில்லை.

2026இல் திமுக படுதோல்வியைச் சந்திக்கும். அதைத்தொடர்ந்து அந்த கட்சியில் பல பிரச்னைகள் உருவாகும்.” என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram