தமிழ்நாட்டில் மூன்று இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான ஆணையை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.சங்கர் அங்கிருந்து மாற்றப்பட்டு, வேளாண்மை- விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு சாலைத் திட்டப் பணி-2இன் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.பிரபாகர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
நில அளவை- நில வரித் திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி, கூடுதல் பொறுப்பாக, முதல்வரின் முகவரி துறையின் மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கு சிறப்பு அதிகாரியாகவும் செயல்படுவார் என்றும் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.