முதலமைச்சரின் முகவரி அதிகாரியாக இருந்த டி.மோகன் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மூன்று முறை மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கெனவே, முதல் இரண்டு இடமாற்ற பட்டியலை வெளியிட்ட நிலையில், மூன்றாவது இடமாற்றம் பட்டியல் இதோ...
உயர் கல்வித்துறை முன்னாள் செயலாளராக இருந்த கார்த்தி தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
வேளாண் துறை சிறப்புச் செயலாளராக இருந்த சங்கர் தமிழ்நாடு பாடப்புத்தகம் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை சிறப்புச் செயலராக இருந்த பி.மகேஸ்வரி தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் தலைமைச் செயலர் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் முகவரி அதிகாரியாக இருந்த டி.மோகன் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளராக இருந்த அஜய் யாதவ் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கண்ணன் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
ஜவுளித்துறை ஆணையராக இருந்த வள்ளலார் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப் கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கற்பகம் சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
கலைஞர் மகளிர் திட்டத் துணை ஆணையராக இருந்த பொற்கொடி ஆவின் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு தமிழ்நாடு மீன்வள வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை ஆணையராக இருந்த சண்முகசுந்தரம் கைத்தறித்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கஜலட்சுமி மீனவர் மற்றும் மீன்வளத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
சமூகநலத் துறை கூடுதல் இயக்குநராக இருந்த எஸ்.பி.கார்த்திகா மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை ஆணையராக இருந்த ஜெ.ஜெயகாந்தன் ஜவுளித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வணிகவரிகள் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தள் துறையின் கூடுதல் செயலாளராக இருந்த ஆர்.சீதாலட்சுமி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
கால்நடைபராமரிப்புத் துறை இயக்குநராக இருந்த எஸ்.அமிர்த ஜோதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறு வனத்தின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலராக இருந்த மகேஷ்வரி ரவிக்குமார் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
சமூக சீர்திருத்தத் துறை முன்னாள் செயலராக இருந்த டி.ஆபிரகாம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஐ.எஸ்.மெர்சிரம்யா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களின் இயக்குநரக மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகு மரி மாவட்ட ஆட்சியராக இருந்த பி.என்.ஸ்ரீதர் - இந்து சமய அறநிலை யங்கள் துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார்.
இந்து சமய அற நிலையத் துறை ஆணையராக இருந்த கே.வி.முரளிதரன் சமூக பாதுகாப் புத்திட்ட இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார்.
கோ-ஆப்டெக்ஸ் நிர் வாக இயக்குநராக இருந்த ஆர்.ஆனந்தகுமார் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பயிற்சித் துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஏ.அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை இயக்குநராக இருந்த ஆர். சுகுமார் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அரசுத் துறைகளைச் சேர்ந்த 51 ஐஏஎஸ் அதிகாரிகளுடன், 10 மாவட்ட ஆட்சியர்கள் நான்கு மாநகராட்சிகளைச் சேர்ந்த ஆணையர்கள் என மொத்தம் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.