சென்னையில் கனமழை (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்துவாங்கும் கனமழை!

Staff Writer

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும்.

அதேபோல், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram