மதுரையைச் சுட்டெரித்த வெயில்  
தமிழ் நாடு

மதுரையைச் சுட்டெரித்த வெயில்- 2 நாள்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ள இடங்கள்!

Staff Writer

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டை வாட்டியெடுத்த வெயில் நேற்று மதுரை மக்களைச் சுட்டெரித்தது என்றுதான் சொல்லவேண்டும். இன்று மதியம் 1 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாநிலத்திலேயே மதுரையில்தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.  

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டை வாட்டியெடுத்த வெயில் நேற்று மதுரை மக்களைச் சுட்டெரித்தது என்றுதான் சொல்லவேண்டும். இன்று மதியம் 1 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாநிலத்திலேயே மதுரையில்தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):

அதிகபட்ச வெப்பநிலை: மதுரை விமான நிலையம்: 41.0 செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை: ஈரோடு: 18.5 செல்சியஸ்

தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும்போது ஓரிரு இடங்களில் தொந்தரவுகள் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பும் எச்சரிக்கையும்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 18.09.2024 மற்றும் 19.09.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.09.2024 முதல் 24.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18.09.2024 முதல் 22.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: 18.09.2024 முதல் 22.09.2024 வரை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 18.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19,09,2024 தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை வட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

21.09.2024 மற்றும் 22.09.2024: தென்மேற்கு அரபிக்கடலின் மேற்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்ற ற்கு அர அரபிக்கடல் பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram