சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஒதுக்குவது பற்றி பதில் அளிக்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என தாங்கள் முறைப்படி அவைத்தலைவரிடம் கடிதம் அளித்ததாகவும், அப்படி 20 முறை கடிதம் கொடுத்தும் அவர் பதில் அளிக்கவில்லை என்றும், எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பேரவைத்தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அதை கேட்டுக்கொண்ட நீதிபதி, பேரவைத் தலைவர் இதுகுறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அடுத்த விசாரணை டிசம்பர் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.