வருடாந்திர சட்டப்பேரவைத் தொடக்கக் கூட்டத்தில், தேசிய கீதத்துடன் தொடங்கவில்லை எனக் கூறி, ஆளுநர் உரையாற்ற முடியாது என ஆர்.என். இரவி மறுத்துள்ளார்.
தான் மீண்டும் மீண்டும் கூறியும், தேசிய கீதத்தைப் பாடி அவை நடவடிக்கைகளைத் தொடங்கவில்லை எனக் கூறிய ஆர்.என்.இரவி கடும் தொனியை வெளிப்படுத்தினார். அப்போது அவையில் இலேசாக சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டிலேயே, அரசின் உரையை முழுவதுமாகப் படிக்காமல் ஆர்.என்.இரவி சர்ச்சைக்கு உள்ளானார். அதையொட்டி கடுமையாக விமர்சனத்துக்கு அவர் உள்ளானதும், பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர்கள் மீதான வழக்கில் பல ஆளுநர்களுக்கும் குட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், மீண்டும் ஆளுநர் இரவி மாநில தி.மு.க. ஆட்சியுடன் மோதல் போக்கைத் தொடங்கியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.