மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாடு முடிவுகள்
காலை முதல் கடும் இழுபறி நீடித்து வந்த தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ. மணி வெற்றி!
தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது!
தருமபுரி தொகுதியில் 13,703 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் ஆ. மணி முன்னிலை!
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தருமபுரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணி 1,582 வக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்!
திருவள்ளூர் தொகுதியில் 4 வாக்கு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளில் தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி 35,087 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை, மத்திய சென்னை தொகுதியில் 25,581 வாக்கு வித்தியாசத்தில் தயாநிதி மாறன் முன்னிலை, தென்சென்னையில் 27,177 வாக்குகள் பெற்று தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை!
புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் துணை ராணுவ அதிகாரிகள் செல்போன் கொண்டு செல்ல முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணிக்காக ஈடுபட்டிருந்த காவல்துறையினர் செல்போன் கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி (பா.ம.க.) முன்னிலை: 24,788 வாக்குகள்!
வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
கடலூர் விஷ்ணுபிரசாத் (காங்) முன்னிலை: 13532 வாக்குகள், மயிலாடுதுறை சுதா (காங்) முன்னிலை: 9418 வாக்குகள்
தமிழ்நாடு முன்னிலை: தி.மு.க.+- 32, அ.தி.மு.க.+ -2, பா.ஜ.க.+ -1.