நீட் தேர்வை ரத்துசெய்ய 14 மாதங்களாக தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி, போடிநாயக்கன்பட்டியில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பழனிசாமி நேரில் சென்றார். பின்னர், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்று 41 மாதங்கள் ஆகியும் நீட்தேர்வை ரத்துசெய்வதற்கான எந்த முயற்சியிலும் அது ஈடுபடவில்லை என்றும் நீட்டை ரத்துசெய்வதாக தி.மு.க. அரசு ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது என்றும் கூறினார்.
நீட் ரத்தாகும் என நம்பிக்கையில் இருந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் தி.மு.க. அரசின் போலி வாக்குறுதிகளால் விலைமதிக்க முடியாத பிஞ்சுகளின் உயிர்களை இழந்துவருகிறோம் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
நீட் தேர்வை ரத்துசெய்வதன் ரகசியத்தை துணைமுதலமைச்சர் உதயநிதி இன்னும் வெளியிடவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.