தி.மு.க. அரசையும் விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து வரும் 20ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் குடிநீரில் சாக்கடை கலப்பது, குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது என மக்கள் சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படுகின்றனர் என்றும்
இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை என்றும்
மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகவும் காவல்துறை கட்டுப்படுத்துவதில்லை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளார்.
தி.மு.க. அரசு மெத்தனமாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குறைகூறியுள்ளார்.
இதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வரும் 20ஆம் தேதி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பழனிசாமி கூறியுள்ளார்.