எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

12 நாள்களில் 40 கொலைகள்... காவல்துறை தோல்வி - குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி

Staff Writer

திமுக ஆட்சியில் கடந்த 12 நாள்களில் மட்டும் 40 கொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைகூறியுள்ளார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் அவர், தமிழகத்தில் போதைப் பொருட்களின் பிடியில் இளைஞர்களும், கொலை, கொள்ளை, பாலியல் வள்கொடுமை என பல்வேறு குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன என்று பட்டியலிட்டுள்ளார்.

சென்ற வாரம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொலை வெறிக் கும்பல் ஒன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்களை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது; அதே போல், சென்னை பட்டினப்பாக்கத்தில் பட்டப் பகலில் ஆற்காடு சுரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்; ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆட்டோவில் சென்ற சுரேஷ் என்பவரை ரடி கும்பல் ஒன்று வெடிகுண்டுகள் வீசி வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடி உள்ளது; மாநிலம் முழுவதும் சமூக விரோதிகளின் நாட்டம் அதிகரித்துள்ளது; ஆனால், காவல்துறையை வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார் என்றும்

நேற்று கோலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ரஞ்சித் என்பவர் ஆஜராகிவிட்டு, தனது நண்பர்கள் நித்திஷ் கார்த்திக் ஆகியோருடன் வீடு திரும்பிச் செல்லும்போது, கூட்டு பேர் கொண்ட மர்ம கும்பன் பட்டப் பகலில் பலங்கர ஆயுதங்களுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன; உயிருக்குப் போராடிய மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; பட்டப் பகலில் நடந்த இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பழனிசாமி விவரித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்க கோரினோம்; உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது; ஆனால் காவல்துறை பாதுகாப்பு வழங்காமல் நெரிசலை வேடிக்கைபார்த்தது என்று குறைகூறியுள்ள பழனிசாமி, அதேபோன்ற நிலைமைதான் இரு நாட்களுக்கு முன்பு சென்னை பளையூர் பகுதியில் நடைபெற்ற ஆஸ்கார் பரிசு பெற்ற இசைப்புயல் திரு. ஏஆர் ரஹ்பான் அவர்களுடைய இசை நிகழ்ச்சியிலும் நடைபெற்றது; முதலமைச்சரின் வாகன அணிவகுப்பும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டது. இது, திமுக அரசின் காவல் துறையினுடைய தோல்வியைக் காட்டுகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.