ஜெகத்ரட்சகனுக்கு அபராதம் விதித்த அமலாத்துறை 
தமிழ் நாடு

ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோடி அபராதம்… எதனால்?

Staff Writer

முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க., எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு  சுமார் 908 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது அமலாக்கத்துறை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் படி அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இந்த விசாரணையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ. 89. 19 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சுமார் ரூ. 908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை எக்ஸ் தள பதிவு

கடந்த சில ஆண்டுகளாக ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரும் நிலையில், இன்று இவ்வளவு பெரிய அபராத தொகையை விதித்துள்ளது அமலாக்கத்துறை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram