முதல்வர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

திராவிட மொழி பேசும் மக்கள் ஆரியத்திற்கு முன்னோடி! – முதல்வர் ஸ்டாலின்

Staff Writer

திராவிட மொழி பேசும் மக்கள் ஆரியத்திற்கு முன்னோடி என நூறாண்டுக்கு முன்பு இதே நாளில் உலகிற்கு சொன்னவர் மார்ஷல். இதை அறிவித்த அவருக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

திராவிட மொழி பேசும் மக்கள் ஆரியத்திற்கு முன்னோடி என நூறாண்டுக்கு முன்பு இதே நாளில் 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி இதை உலகிற்கு அறிவித்தவர் ஜான் மார்ஷல்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது தொல்லியல் துறை தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சிந்து சமவெளி பண்பாடு என்பது திராவிட நாகரிகம் என கண்டறியப்பட்டது. ஆய்வு முடிவுகள் வெளியாகி நூறாண்டுகள் ஆகும் நிலையில் அதை நன்றியுடன் திரும்பிப் பார்த்து ஜான் மார்ஷலுக்கு நன்றி கூறுகிறேன்.

அவரின் கண்டுபிடிப்பால் இந்திய துணைகண்ட வரலாறே மாற்றியமைக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, சர் ஜான் மார்ஷலுக்கு முழு உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று ஏற்கனவே எனது அரசு அறிவித்துள்ளது.” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram