மருத்துவர் பாலாஜி 
தமிழ் நாடு

கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்!

Staff Writer

சென்னையில் கடந்த வாரம் கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி, கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர் பாலாஜி (வயது 53) கடந்த சில தினங்களுக்கு முன் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். தன்னுடைய தாயாருக்கு சரியாகச் சிகிச்சை அளிக்கவில்லை என்று விக்னேஷ் என்ற வாலிபர் அந்த வெறித் தாக்குதலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து மருத்துவரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர். இதையடுத்து மருத்துவர் பாலாஜி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கத்திக்குத்தால் காயமடைந்த மருத்துவர் பாலாஜி, கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார். பாலாஜியை சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram