விக்கிரவாண்டி 
தமிழ் நாடு

விக்கிரவாண்டியில் தி.மு.க. முன்னிலை!

Staff Writer

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மதியம் 12: 20 மணி நிலவரப்படி 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது.  

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், தி.மு.க.வே முன்னிலையில் இருந்தது.

முதல் சுற்று முடிவில், தி.மு.க. -8,564, பா.ம.க.- 3,096, நா.த.க.- 240 வாக்குகள் பெற்றிருந்தன. 

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது, சிறிது சலசலப்புஏற்பட்டது. தபால் வாக்குச் சீட்டில் வரிசை எண்கள் சரியாக இல்லை என தி.மு.க., பா.ம.க. இரு கட்சிகளும் புகார் எழுப்பின. ஆனால், அப்படி இல்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்ததும் அவர்கள் சமாதானம் அடைந்தனர். 

இரண்டாம் சுற்று முடிவில் 9.30 மணி நிலவரப்படி, முதல் இரண்டு இடங்களில் உள்ள கட்சிகளின் வாக்கு வித்தியாசம் அதிகமானது. தி.மு.க. -11,928, பா.ம.க.- 5,404, நா.த.க.- 819 வாக்குகளைப் பெற்றிருந்தன. 

மூன்றாவது சுற்றில் தி.மு.க., பா.ம.க.வுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 15 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்தது. காலை 10.30 மணி நிலவரப்படி தி.மு.க. -24,169, பா.ம.க.- 9,131, நா.த.க.- 1,383 வாக்குகளையும் பெற்றிருந்தன. 

12.15 மணி நிலவரம்: தி.மு.க. -63,205, பா.ம.க.- 27,845, நா.த.க.- 5265

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram