மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கைவசமுள்ள நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான உடன்பாடு சற்றுமுன்னர் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.
தி.மு.க. தரப்பில் ஸ்டாலின், சி.பி.ஐ. சார்பில் அதன் மாநிலச் செயலாளர் முத்தரசன் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “ மோடியின் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதிக்குப் பதிலாக, வேலைகள் பறிக்கப்பட்டன. மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயத்தோடு செயல்படுகிறது, பா.ஜ.க. “ என்றும் குற்றம்சாட்டினார்.