அயல்நாட்டு முதலீடுகளைஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களை நேரில் பார்வையிட்டும் அந்த நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொண்டும் வருகிறார்.
இதனிடையே, அங்கிருந்தபடியே முதலமைச்சருக்கான பணியையும் பார்ப்பதாக அவர்தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் அவர் வெளியிட்டுள்ள சமூகஊடகப் பதிவில்,
“அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன.
அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் eOffice (மின்
அலுவலகம்) வழியே பணி தொடர்கிறது...” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேசைக் கணினி ஒன்றில் மின் எழுதி மூலம் அவர் கோப்புகளைக் கவனிக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.