சனாதன சர்ச்சை அதுஇதுவென தி.மு.க.வுக்கு எதிராக மதவாத அமைப்புகளும் கட்சிகளும் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் சென்னை, திருவான்மியூரில் இந்து சமயத் துறையின் சார்பில் 31 இணையர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இந்துசமயத் துறையில் ரூ.6,792 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், இந்தக் காலகட்டத்தில் தான் இந்து சமயத் துறை நிகழ்ச்சிகளில்தான் அதிகமாகக் கலந்துகொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.