முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வெள்ளத் தடுப்பு ஆலோசனை 
தமிழ் நாடு

சென்னை, பக்கத்து மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு- முதல்வர் ஆலோசனை!

Staff Writer

மழை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

சென்னை மாவட்ட அமைச்சர்களில் துணைமுதலமைச்சர் உதயநிதி இதில் கலந்துகொண்டார். 

தலைமைச்செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், துறைகளின் செயலாளர்கள் சுகாதாரத் துறை சுப்ரியா, வருவாய்த் துறை அமுதா, பொதுப்பணித் துறை மங்கத்ராம் சர்மா, நீர்வளத்துறை மணிவாசகன்,

வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி,

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்,

மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தீயணைப்பு, மீட்புப் படை இயக்குநர் ஆபாஷ்குமார், சென்னை காவல்துறை ஆணையர் அருண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்கள் செங்கல்பட்டு அருண்ராஜ், காஞ்சிபுரம் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் பிரபுசங்கர் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram