முதலமைச்சர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

3 ஆண்டுகளில் 2.5 இலட்சம் புத்தகங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட தகவல்!

Staff Writer

தி.மு.க. ஆட்சியில் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் தனக்குப் பரிசாக சுமார் இரண்டரை இலட்சம் புத்தகங்கள் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகப் புத்தக நாளை முன்னிட்டு அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள செய்தி:

“புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்!

புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.

கையில் புத்தகங்கள் தவழட்டும்!

சிந்தனைகள் பெருகட்டும்!

நல்வழி பிறக்கட்டும்! “ என்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.