நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதியத் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரை பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த சின்னதுரை, அவரின் சகோதரி சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த ஆண்டு சக மாணவர்களே சாதிவெறியுடன் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பன்னிரண்டாம் வகுப்பு படித்த வந்த சின்னதுரையின் கைகள் வெட்டப்பட்ட நிலையில், அவர் காலாண்டுத் தேர்வை மருத்துவமனையிலிருந்தே எழுதினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீடு திரும்பிய சின்னதுரை, தேர்வு விதிகளின்படி பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை வேறு ஒருவரின் உதவியுடன் எழுதினார்.
பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், சின்னதுரை 469 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
சின்னதுரை எடுத்துள்ள பதிப்பெண் பட்டியலை பல்வேறு தரப்பினரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.