வந்தே பாரத் ரயில் சேவை  
தமிழ் நாடு

நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் எங்கெங்கு நிற்கும்?

Staff Writer

சென்னை - நாகர்கோவில் வந்தேபாரத் ரயில்சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார்.

இந்த வந்தே பாரத் தொடர்வண்டி சென்னையில் எழும்பூரிலிருந்து காலை 5 மணிக்குக் மணிக்குக் கிளம்பும். தாம்பரம் (5.23 மணி), விழுப்புரம் (6.52 மணி), திருச்சி (8.55 மணி), திண்டுக்கல் (9.53 மணி), மதுரை (10.38 மணி), கோவில்பட்டி(11.35 மணி), திருநெல்வேலி (12.30 மணி) வழியாக பிற்பகல் 1.50 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.

மறுவழியில், அங்கிருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு, நெல்லை (3.18 மணி), கோவில்பட்டி (3.58 மணி), மதுரை (5.03 மணி), திண்டுக்கல் (5.48 மணி), திருச்சி (6.45 மணி), விழுப்புரம் (இரவு 8.53 மணி), தாம்பரம் (10.28 மணி) ஆகிய நிலையங்களில் நின்று, இரவு 11 மணிக்கு எழும்பூரை அடையும்.

சென்னைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையே 724 கி.மீ. தொலைவை இந்த வந்தே பாரத் தொடர்வண்டி ஒன்பது மணி நேரத்திற்குள் கடந்துசெல்கிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram