அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் உட்பட்ட அவரின் கட்சியினர் மீதுதேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.
தேனி மக்களவைத்தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தினகரன், வேட்பு மனு தாக்கலன்று விதிகளைமீறி 70 வேன், கார்கள், 3 ஆட்டோக்கள், 3 டூவிலர்களில் ஊர்வலமாகச் சென்றதாகவும், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக இருந்தனர் என்றும் அரசுப் பணியாளர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்தனர் என்றும் பிரச்னை எழுந்தது.
இதுகுறித்து தினகரன், அவரின் கட்சி நிர்வாகி இராம்பிரசாத் உட்பட்ட பலரின் மீதும் அத்தொகுதியின் வீடியோ கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலை துணை இயக்குநருமான நீதிநாதன் புகார் அளித்தார். அதன்படி, தேனி காவல்நிலையத்தினர் தினகரன், இராம்பிரசாத் உட்பட்ட அ.ம.மு.க.வினர் மீது வழக்கு பதிந்தனர்.