குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,
”ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர்களும் ஏன் வாய் திறக்கவில்லை.குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பா.ஜ.க. இதுகுறித்தும் பேசவேண்டும்.” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.