பெண்களுக்கு மத்திய அரசு பல நன்மைகளைச் செய்ததாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்தபோது, நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. விதித்ததைப் பற்றி ஒரு பெண் கேள்வி எழுப்பினார். அதைக் கேட்ட திருப்பூர் பா.ஜ.க.வினர் அந்தப் பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவருடைய கடைக்குள் சென்றும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அவரைத் தகாத வார்த்தைகளால் அவமதித்து, காட்டிமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர். அவர்களின் மிரட்டலையும் தாக்குதலையும் அந்தப் பெண் படம்பிடிக்க முயன்றபோது, செல்போனைத் தட்டிவிட்டும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
சுற்றிலும் உள்ளவர்கள் வந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார்கள்.
திருப்பூர், ஆத்துப்பாளையம் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது.