மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாகப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சற்று முன்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதைக் கூறினார்.
வாசன் தலைமையிலான த.மா.கா. கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, அவரின் நிலைப்பாடு தொடர்பாகத் தெரிவிப்பார் என்றும் அதன்பிறகு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அவரவர் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரங்களை வெளியிடுவார்கள் என்றும் அண்ணாமலை கூறினார்.
முன்னதாக, பா.ஜ.க. மாநில அலுவலகமான கமலாலயத்தில், கட்சியின் அகில இந்தியத் தலைவர் நட்டாவுடன் அண்ணாமலை முதலிய மாநில நிர்வாகிகள் 4 மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தினர்.
இதில், ஓ.பன்னீர் தரப்புக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அவர் போட்டியிடாமல் போகவும் வாய்ப்பு உண்டு என்றும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.