ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி 
தமிழ் நாடு

சென்னையில் இன்னொரு அரசு மருத்துவர் மீதும் தாக்குதல்!

Staff Writer

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே தலைநகரிலேயே இன்னொரு அரசு மருத்துவரும் தாக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

வடசென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருபவர், ஹரிஹரன். இவரை, இதே மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவரே தாக்கியுள்ளார். 

அவர் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் என்று கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட மருத்துவர் முகத்தில் குறிப்பாகத் தாடையில் கிழிசல் ஏற்படும் அளவுக்கு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன என்றும் துறைத் தலைவர் மருத்துவர் சபீதா தெரிவித்தார். 

நல்வாய்ப்பாக பெரும் ஆபத்து எதுவுமில்லாமல் மருத்துவர் தப்பியுள்ளார். அவருக்கு சிகிச்சை தொடர்ந்துவருகிறது. 

சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் கல்லூரியின் சார்பில் முதல்வர் புகார் அளித்துள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram