நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - அன்னபூர்னா உணவக குழும தலைவர் சீனிவாசன் 
தமிழ் நாடு

அன்னபூர்னா விவகாரம் என்னதான் ஆச்சு... இன்றுவரை நடந்தது?

Staff Writer

கோவையின் பிரபல அன்னபூர்னா உணவக உரிமையாளர் சீனிவாசன், அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசியது சர்ச்சை ஆகியது. அதையடுத்து நெருக்கடிக்கு உள்ளான அவர், அமைச்சர் நிர்மலாவைச் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அந்தச் சந்திப்புக் காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது. 

இப்படி அவரை மன்னிப்பு கேட்கவைத்து காணொலியையும் பா.ஜ.க.வினர் பரப்பி அவமானப்படுத்தியதாக எம்.பி.கள். தி.மு.க. கனிமொழி, காங்கிரஸ் ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். 

எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை அடுத்து, கோவையில் செய்தியாளர்களைக் கூட்டிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அமைச்சரிடம் சீனிவாசன் சந்தித்து மன்னிப்பு கேட்டது அவரின் கோரிக்கை; அவரை யாரும் வற்புறுத்தவில்லை; யார் அந்தக் காணொலியை எடுத்தது என்று தெரியவில்லை எனக் கூறினார். 

இதற்கு நேர்மாறாக, லண்டனில் உள்ள பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, மிக முக்கிய தொழிலதிபரான சீனிவாசனிடம் தானே பேசி மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சரும் அவரும் நடத்திய தனிப்பட்ட உரையாடலை வெளியிட்டது தவறு என்றும் கூறியுள்ளார்.