திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற திமுக முயலுமேயானால், அது நடக்காது. வன்முறை வெறியாட்டங்கள் மூலம் பாஜகவினரை முடக்க நினைக்கும் திமுகவினர் முயற்சி பலிக்காது.” என்று கூறியுள்ளார்.
காவல்துறை, உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளுங்கட்சியினர் மிரட்டல்களுக்குப் பயந்து, குற்றவாளிகள் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்க முயற்சி நடக்குமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி சும்மா இருக்காது என்று எச்சரிப்பதாகவும் அண்ணாமலை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.