அன்புமணி  
தமிழ் நாடு

செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு அன்புமணி கண்டம்!

Staff Writer

பாலிமர் செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு என்பவரின் அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் செயல்பட்டு வரும் “சகாரா எக்ஸ்பிரஸ்” என்ற கொரியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் அங்கு படம் பிடிக்கச் சென்ற பாலிமர் செய்தித் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் என்பவரை தி.மு.க.வினர் பிடித்து அறையில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.” என்றும்,

“தி.மு.க.வினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.” என்றும் கூறியுள்ளார்.

இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.