விஜய் - திருமாவளன் 
தமிழ் நாடு

விஜய்யுடன் கூட்டணி... திருமா சொன்ன ‘நச்’ பதில்!

Staff Writer

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அரசியல் தலைவர் ஒருவருடன் மேடையில் அமர்வது கூட்டணி வைப்பதைக் குறிப்பது இல்லை.” என திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தங்களோடு கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என அறிவித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், சென்னையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி தனியார் வார இதழ் புத்தக வெளியீட்டு விழாவை நடத்த உள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகிய இருவரும் ஒன்றாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், திருமாவளவன் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை வெளியிடும் நிகழ்வில் அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஓராண்டுக்கு முன்பே இசைவு தந்திருந்தேன். இப்போதுதான் அதில் விஜய் பங்கேற்பதாக அறிந்தேன். ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அரசியல் தலைவர் ஒருவருடன் மேடையில் அமர்வது கூட்டணி வைப்பதைக் குறிப்பது இல்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram