சென்னை மெரினாவில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கானோர் கண்டுகளித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மெரினாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, இதைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினாவில் திரண்டுள்ளதால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காண வசதியாக 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
விமானப் படையின் ரஃபேல், மிக்-29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், ஜாகுவார், சுகோய், சராங் குழு, சூர்ய கிரண் விமானக் குழு, ஆகாஷ் கங்கா குழு, சேதக் உள்பட 20க்கும் மேற்பட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விமான சாகச நிகழ்ச்சியை நேரில் கண்டுரசிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மெரினாவுக்கு வருகை தந்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தயாநிதி மாறன் உள்பட திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மெரினாவில் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்து வருகின்றனர்.