அ.தி.மு.க. தலைமை அலுவலகம் 
தமிழ் நாடு

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

Staff Writer

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற பணிகள், அண்ணாமலை - அ.தி.மு.க. இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழல், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து, அடுத்தகட்ட முடிவெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குழுவினர் நேற்று டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி பியூஷ்கோயல் ஆகியோரை சந்தித்து அண்ணாமலை விவகாரம் பற்றி அவர்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.