சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ. ராசாவின் 15 அசையாச் சொத்துகளை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறையின் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கு ஆகியவற்றின்படி, மத்திய முன்னாள் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குச் சொந்தமானவையும்- அவரின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் என்ற பெயரில் உள்ளவையுமான 15 அசையாச் சொத்துகளை அமலாக்கத் துறை கையகப்படுத்தியுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.