பெயர்மாற்ற அலுவலகம், சென்னை 
தமிழ் நாடு

ஒன்றரை ஆண்டுகளில் 997 பேர் தமிழில் பெயர் மாற்றம்!

Staff Writer

சேலம், விருத்தாசலம், புதுக்கோட்டை ஆகிய மூன்று மையங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெயர் மாற்றியவர்களில் 997 பேர் தமிழில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சான்றிதழ்களில் பெயர்களை மாற்றுவதற்கு எழுதுபொருள் அச்சுத்துறையில் சென்னைக்கு வந்தோ அஞ்சலிலோ விண்ணப்பம் செய்வது கட்டாயம். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ளவர்கள் பல அவதிகளைச் சந்திக்க நேர்வது நீண்ட காலப் புகாராக இருந்துவந்தது.

இந்த நிலையில், சென்னையில் இத்துறையின் ஆணையரகத்தில் மட்டும் செயல்பட்டு வந்த பெயர் மாற்ற அலுவலகமானது, மதுரை, திருச்சிராப்பள்ளியில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் செயல்பட்டுவரும் அரசு வெளியீடுகள் துணை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

மேலும்  கடந்த ஆண்டி ஏப்ரல் அரசாணையின்படி, சேலம், புதுக்கோட்டை, விருத்தாசலம் ஆகிய  கிளை அச்சக  அலகுகளில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

சேலம், புதுக்கோட்டை மற்றும் விருத்தாசலம் ஆகிய  கிளை அச்சகங்களில் 26.04.2023 முதல் 30.09.2024 வரையிலான காலத்தில் 9,255 பேர் பெயர்மாற்றம் செய்துகொண்டனர்.

இவர்களில் தமிழில் 997 பேரும் ற்றும் ஆங்கிலத்தில் 8,258 பேரும் பெயர் திருத்தம் / பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

அரசிதழில் இதை வெளியிடப்பட்டதன் மூலம் அரசிற்கு ரூ.54.41 இலட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இதில், சேலத்தில் 7,288 பேர், புதுக்கோட்டையில் 932 பேர், விருத்தாசலத்தில் 1,035 பேர் பெயர் மாற்றப் பதிவுசெய்துள்ளனர்.

மேலும், 24 திருநர்களுக்கு கட்டணமின்றி பெயர் திருத்தம் / பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram