நெல்லை மாவட்டம் நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நாங்குநேரியில் கடந்த 9ஆம் தேதியன்று இரவு, பட்டியல் சாதி பள்ளி மாணவரையும் அவரின் தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்களே வெட்டிக்கொல்ல முயன்றனர். தமிழகத்தையே உலுக்கியெடுத்த இந்த சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட ஏழு சிறுவர்களில் மூவருக்கு திருநெல்வேலி மாவட்ட சிறார் நீதிக் குழுமம் பிணை வழங்கியுள்ளது.
பிணை மனுக்களை விசாரித்த நெல்லை மாவட்ட சிறார் நீதிக் குழுமத்தின் தலைவரான 2ஆவது நடுவர் ஆறுமுகம், வியாழனன்று பிணை வழங்கி உத்தரவிட்டார்.
தாக்கியவர்கள் தப்பியோட குறிப்பிட்ட மூன்று சிறுவர்களும் உதவி செய்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் இருவர் திங்கள், வியாழன் தோறும் நாகர்கோவில் சிறார் நீதிக் குழுமத்தில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்றும், மூன்றாவது சிறுவன் நெல்லை சிறார் குழுமம் முன்பாக முன்னிலையாக வேண்டும் என்றும் நடுவர் உத்தரவிட்டார்.